உண்மையை மறைத்துவிட்டு ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு கருத்து : மக்களை ஏமாற்ற நடைபயணம்… ராகுல் காந்தி மீது வானதி குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 8:47 am
Vanathi vs Rahuk - Updatenews360
Quick Share

கர்நாடகாவில், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை செல்லும் காங்., எம்.பி., ராகுல், சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

பாரதிய ஜனசங்கம், 1951- மற்றும் பா.ஜ., 1980ல் துவக்கப்பட்டது. இதனால், 1947க்கு முன் நடந்த சுதந்திர போராட்டத்தில் இவ்விரண்டும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.

ஆனால், ஜன சங்கத்தை துவக்கிய ஷியாம பிரசாத் முகர்ஜி, காங்., கட்சியில் இருந்தவர். நேருவின் அமைச்சரவையில் இருந்தவர். அவர் சுதந்திரத்துக்காக போராடவில்லையா?

ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டதே சுதந்திர போராட்டத்துக்காக தான். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை 1925-ல் துவங்கிய கேசவ பலிராம் ஹெட்கேவார், காங்., முக்கிய தலைவராக இருந்தவர்.

கோல்கட்டா மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் போதே, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். தேசிய நலன் கருதியே மக்களுக்கு பயிற்சி அளிக்க, ஒரு இயக்கத்தை துவக்க அவர் முடிவு செய்தார்.

சிறையிலிருந்து வெளிவந்ததும், 1925 விஜயதசமி நாளில் அவர் துவக்கியது தான் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம். மற்ற இயக்கங்கள் போல அல்லாது, பள்ளி, கல்லுாரி மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தார்.

கல்லுாரியில் படிப்பது மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ்., கிளையான, ‘ஷாகா’வை துவங்குவது தான் மாணவர்களின் முக்கிய நோக்கம். இந்த இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் சுதந்திர போராட்ட வீரர்கள்.

இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, ராகுல் அவதுாறு பரப்பி வருவது கண்டனத்துக்குரியது.

நேரு, இந்திரா குடும்ப மாயையில் இருந்து இந்தியா விடுபட்டு விட்டது. மக்களை ஏமாற்றி, எப்படியாவது தேர்தலில் வென்று விடலாம் என நினைத்து, பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 318

0

0