நெற்றியில் ‘மாரிதாஸ் வாழ்க’…கையில் ‘திமுக சிற்றரசு ஒழிக’: உடலில் சர்ச்சை வாசகங்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த நபர்..!!

Author: Rajesh
13 December 2021, 1:03 pm
Quick Share

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் நெற்றியில் “மாரிதாஸ் வாழ்க” என்றும் உடலில் திமுகவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குன்னூரில் ராணுவ ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து உண்மைக்கு புறம்பான கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரூரை சேர்ந்த கந்தசாமி (42) என்ற நபர் வந்தார். நீங்கள் எந்த ஊர் என்று கேட்டதற்கு “நான் இந்தியாவை சேர்ந்தவன்” என்று பதில் அளித்த அவர், தனது நெற்றியில் “மாரிதாஸ் வாழ்க” என்று எழுதியிருந்தார்.

மேலும், தனது கைகளில், “ஃபாரின் மத வெறி, திமுக சிற்றரசு ஒழிக” என்றும், “எல்லா புகழும் நம் நாட்டு சாமிக்கு. ஃபாரின் மத காட் நோ யூஸ்” என்றும் கலகலப்பான வசனங்களை எழுதி வந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மாரிதாஸ் எப்போதும் நல்லதையே பேசுபவர் என்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 289

0

0