அடேங்கப்பா!…இவ்வளவு லஞ்சமா? கிறுகிறுக்க வைக்கும் தமிழக போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 4:22 pm
TN Police Corruption List -Updatenews360
Quick Share

சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழக காவல்துறையைப் பற்றிய ஒரு திடுக் தகவல் வைரலாகி வருகிறது. அது பல்வேறு துறைகளிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள் லிஸ்ட்

அதாவது, காவல் நிலையங்களில் எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற ரகசிய பட்டியல்தான் அது. இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Rs 10 thousand bribe was purchased Andrei Police Station Sub-Inspector  arrested || ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அந்தேரி போலீஸ் நிலைய  சப்–இன்ஸ்பெக்டர் கைது

இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் இப்போதுதான் தமிழக போலீசார் லஞ்சம் வாங்குகிறார்களா?…என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்று. இப்பிரச்சனை இப்போது, திடீரென அலசப்படுவதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் முக்கிய காரணம் என்று சொல்லாம்.

ஆளுநர் ரவி எடுத்த அதிரடி

தமிழகத்தின் ஆளுநராக ரவி கடந்த மாதம் 18-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அடுத்த சில நாட்களிலேயே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியான சைலேந்திரபாபுவை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்தும் பேசினார்.

தி.மு.க வினர் மீது வழக்குகள் போடப்பட்டதா? டி.ஜி.பி யிடம் கேள்வி எழுப்பிய  ஆளுநர் ஆர்.என்.ரவி! | Governor RN Ravi Meets DGP Sailendra Babu !

அதைத்தொடர்ந்து உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலினை டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்துப் பேசினார். இருவரது சந்திப்பிலும் என்ன பேசப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிய வரவில்லை. எனினும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி பேசி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதை உண்மை என்று கூறுவதுபோல் அடுத்த சில நாட்களில் மாநிலம் முழுவதும் சுமார் 2500 ரவுடிகள் வேட்டையாடப்பட்டனர்.

Stalin welcomes Tamil Nadu Guv appointee Ravi at Chennai airport - DTNext.in

ரவுடிகளால் தமிழக காவல்துறைக்கு நெருக்கடி

இந்த ரவுடிகள் எல்லாம் இவ்வளவு நாட்களாக எங்கே சுதந்திரமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்கள்? இவர்களை போலீசார் எப்படி நடமாட அனுமதித்தனர்?என்ற கேள்வியும் எழுந்து தமிழக காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஆப்கனில் இருந்து போதைப்பொருள் கடத்திய சென்னை தம்பதி

இதன் அடுத்தகட்ட நிகழ்வாக ஆப்கானிஸ்தான் நாட்டின் வழியாக இந்தியாவுக்குள் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை

இதனால் காவல்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க மாநில டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுடன் காவல்துறையினரில் பலர் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால்தான் இரு தரப்பினரையும் இணைக்கும் பலமாக லஞ்சம் இருக்கிறது, என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

புகார் கொடுக்க வந்தால் லஞ்சம் கட்டாயம்

குறிப்பாக, காவல் நிலையங்களுக்கு வரும் மக்களின் குறைகளைத் தீர்க்காமல் அவர்களிடம் பணம் பெறுவதும், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை விற்கும் வியபாரிகளிடம் மாமூல் வசூலித்து வருவதும், நீண்டகால புகாராக இருந்து வருகிறது. இதனால் காவல் துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைகிறது. இந்த நிலையை மாற்றி மக்களுக்கு காவல்துறையின் மீது அழுத்தமான நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழக டிஜிபி இந்த நடவடிக்கையில் இறங்கி அதிரடி காட்டியுள்ளார்.

வெளிமாவட்ட வாகனங்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம் |  police suspended - hindutamil.in

4 நாட்களுக்கு முன்பு அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து சரக டிஐஜிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் யார், யார் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள்? என்ற விவரத்தை ஒளிவுமறைவின்றி ஒரு பட்டியலாக தயாரித்து உடனடியாக தனக்கு அனுப்பி வைக்கும்படி அவர் உத்தரவிட்டும் இருந்தார்.

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் ரகசிய லிஸ்ட்

இதனால் காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
எனினும் எழுத்தர், ஏட்டு சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்,போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்
எதற்கெல்லாம், எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள்? என்ற விவரங்களை முழுமையாக தயாரித்து அந்தப் பட்டியல்களை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு, டிஐஜிகள் அனுப்பியும் வைத்தனர்.

லஞ்சம் வாங்கும் போலீசுக்கு சரியான பாடம்... பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி  கைது..!! | This is a good lesson for the police who take bribes ... Female  inspector arrested .. !!

அந்த ரகசிய பட்டியல்களில் இருந்த விவரங்களைப் பார்த்தால் பொதுமக்களுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். இந்த அளவிற்கு போலீசார் இவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்களா? என்று வாயைத்தான் பிளப்பார்கள்.

காவல்துறையினர் மிகவும் லஞ்ச வறட்சி மாவட்டங்களாக கருதும் திண்டுக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகியவற்றில் யார் யார் எவ்வளவு லஞ்சம், மாமூல் வாங்குகிறார்கள் என்று அந்த ரகசிய பட்டியலில் கூறப்பட்டுள்ள வசூல் விவரம் இதுதான்.

காவல் நிலைய எழுத்தர்கள்:

*பாஸ்போர்ட் லைசென்ஸ் பெற தடையில்லா சான்று வாங்குவதற்கு ரூ.1000 வரை.

  • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களிடம் மாமூல் ரூ1000.
  • காவல் நிலையத்திலேயே பெயிலில் விடுவதற்கு ரூ.500

சப் இன்ஸ்பெக்டர்கள்

*சிவில் பிரச்சனைகளுக்கு 5 ஆயிரம் முதல் 10000 ரூபாய்.

  • தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களிடம் ரூ. 5000 வரை.
  • சீட்டாட்டம் இதர வகை சூதாட்டத்தில் ஈடுபவர்களிடம் ரூ.1000 முதல் 5000 ரூபாய்.

*மணல் கொள்ளையர்களிடம் ரூ.5000 முதல் 30000 வரை

  • விபத்து வழக்கில் காவல் நிலையத்திலேயே பெயிலில் விடுவதற்கு ரூ2000 முதல் 5000.
  • குட்கா விற்பனை செய்வோரிடம் மாமூல் ரூ.2000
  • சட்டவிரோத ஒயின் ஷாப்பில் விற்பனையாளர்களிடம் ரூ. 2500. அனுமதி இல்லாத பார் நடத்துபவர்களிடம் ரூ.2000.

இன்ஸ்பெக்டர்களின் வருமானம்

*இடப் பிரச்சனையாக வருபவர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 ஒரு லட்சம். சொத்தின் மதிப்புக்கு ஏற்ப இந்த வசூல் கூடும்.

  • உடனடி வழக்கு விசாரணைக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை.
  • அழகு நிலையங்கள், ஸ்பா மையங்களில் மாமூல் ரூ.5000

*தாபா ஹோட்டல்களில் ரூ 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம்.

  • கிரானைட் குவாரிகளில் குறைந்த பட்சம் ரூ.10000

*மணல் கடத்தல்காரர்களிடம் ரூ.20 ஆயிரம்.

*சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாமூல்.

லஞ்சத்தை பொறுத்தவரை கையில காசு வாயில தோசை. மாமூல் என்பது வாரம் ஒரு முறை, இரு வாரத்துக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என வசூல் வேட்டையை காவல் நிலையங்களில் தரம் வாரியாக பிரித்து வைத்துள்ளனர். பணப்புழக்கம் அதிகம் உள்ள சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசூல்தொகை இதைவிட அதிகமாக இருக்கும்
என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் உயரதிகாரிகள் கருத்து

இதுபற்றி காவல்துறை முன்னாள் உயரதிகாரிகள் சிலர் கூறும்போது, “பல
இடங்களில் இன்ஸ்பெக்டர்கள் எதற்கும் பயப்படாமல் காவல் நிலையத்திற்கே வரச்சொல்லி மாமூல் வாங்குகிறார்கள். இதை நிறுத்தினாலே போதும் குற்றங்கள் நடப்பதை தடுக்கலாம். போலீசார் மாமூல் வாங்குவதால்தான் சமூக விரோதிகள் அச்சமின்றி தைரியமாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.

Tn Police Department Logo - Tamil Nadu Police Flag - Free Transparent PNG  Clipart Images Download

அதேபோல் உளவுத்துறை என்று சொல்லக்கூடிய கீழ் மட்டத்தில் உள்ள எஸ்பிசிஐடி போலீசார் மற்றும் எஸ்பி தனிப்பிரிவு போலீசார் நேர்மையாகவும் லஞ்சம் வாங்காமல் செயல்பட்டால் காவல்நிலையங்களில் உள்ள ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் யாரும் லஞ்சமும், மாமூலும் வாங்க மாட்டார்கள்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொதுமக்கள் கூறும்போது, “போலீசாரையும் லஞ்சத்தையும் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம். 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால் புகாரின் தன்மையை ஆராய்வார்கள். இன்றோ நமது பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதுவும் இருவர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால் அதிகப் பணம் யாரிடம் இருக்கிறதோ, அவர்தான் நியாயவான் என்று முடிவு செய்தும் விடுகிறார்கள். இதில் வட்டம், மாவட்டம், எம்எல்ஏ, எம்பி என்று அரசியல்வாதிகளும் உள்ளே நுழைந்து விடுகின்றனர். தமிழகத்தில் பல காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து மையங்களாகத்தான் செயல்படுகின்றன. இங்கே அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தாவிட்டால் போலீசார் லஞ்சம், மாமூல் வாங்குவது பாதியாக குறையும்.

லஞ்சம் வாங்கிய விஏஓவை மடக்கிப்பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

முதலில் போலீசை கண்டால் பொதுமக்களுக்கே பயம் வருவதில்லை. பிறகு எப்படி ரவுடிகளுக்கும், தாதாக்களுக்கும் பயம் வரும். 10 வருட சர்வீசுக்கு மேலான போலீசாரில் பெரும்பாலானவர்கள் தொப்பையுடன்தான் இருக்கிறார்கள். காக்கிச்சட்டை கம்பீரமாக இருக்க வேண்டுமென்றால் கடுமையும், மிடுக்கும் அவசியம். தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பலன் அளித்தால் மக்களுக்கு நல்லதுதான்” என்று கூறுகின்றனர்.

நெட்டிசன்கள் விமர்சனம்

இதுபற்றி நெட்டிசன்கள், “போலீஸ் வாங்கும் லஞ்சத்தை பார்த்தால் 4 தலைமுறைக்கு சம்பாத்தியமே வேணாம் போல…, எப்படியாவது ஒரு போலீஸ் வேலையில சேரணும், ஆயுள் முழுக்க நிம்மதியா வாழணும்… இன்றைய போலீஸ்காரர் நாளைய கோடீஸ்வரர்…, போக்கத்தவருக்கு போலீஸ் வேலை என்பது அப்போ… நிறைய புண்ணியம் செஞ்சிருக்கணும் இப்போ…” என்று காவல்துறையினர் லஞ்சம், மாமூல் வாங்குவதை கலாய்த்து வருகின்றனர்.

லஞ்சம், மாமூல் பெறும் போலீசார் பற்றி சினிமாவில் அடிக்காத கிண்டலா?… இதெல்லாம் வெறும் ஜுஜுபி!

Views: - 577

0

0