கொட்டும் மழையிலும் தேசம் காக்கும் ‘ரியல் ஹீரோக்கள்’….!!

3 November 2020, 10:44 am
rain army - updatenews360
Quick Share

கொட்டும் மழையிலும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரையில் தோன்றும் நடிகர்களையும், விளையாட்டு நட்சத்திரங்களையும் ஹீரோக்களாக கொண்டாடி வருகிறோம். ஆனால், எல்லையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தேசம் காக்கும் ராணுவ வீரர்களே ரியல் ஹீரோக்கள். தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் என தனக்கான அனைத்து சொந்தங்களையும் பிரிந்து, கொட்டும் மழை, கடும் வெயில், பனி என அனைத்தையும் தாங்கிக்கொண்டு நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்து வாழும் வீரர்களே நாம் போற்ற வேண்டிய நிஜ கதாநாயகர்கள்.

ஒருபக்கம் பாகிஸ்தானின் தாக்குதல், மறுபக்கம் சீனாவின் அத்துமீறல், இதுமட்டுமின்றி உள்நாட்டிலேயே நடமாடும் தீவிரவாதிகளை கண்காணிக்க வேண்டிய பணி என ராணுவத்தினரின் பணிகளை அளவிட முடியாத வகையில் உள்ளது.

இத்தகைய ராணுவ வீரர்களின் பணி எப்படிபட்டது என்பதை விளக்கும் வகையில் உள்ள
வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கொட்டும் மழையில், அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களின் வீடியோ இணையத்தில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Views: - 15

0

0