குடியரசு தின விழாவில் அதிரடி மாற்றம் : என்எஸ்ஜி முடிவு

15 January 2021, 10:10 am
republic_day_updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின விழாவின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாற்றங்களை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர்.

நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு மருத்துவக் கட்டுப்பாடுடன் குடியரசு தினம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தின விழாவின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாற்றங்களை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஒருவர் தோள் மீது மற்றொருவர் ஏறி அமர்ந்து சாகசம் செய்வது தவிர்க்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் இடையே தனிமனித இடைவெளியுடன் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, வழக்கமாக அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்களை 40% குறைந்த வீரர்களை மட்டுமே கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவிருக்கும் புதிய வாகனத்தை காட்சிப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 9

0

0