எஸ்.பி.பி.யின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தார் எஸ்.பி.பி. சரண் : கண்ணீரில் மிதக்கும் தாமரைப்பாக்கம்..!

26 September 2020, 10:56 am
spb funeral - updatenews360
Quick Share

திருவள்ளூர் : உடல்நலக்குறைவால் காலமான பாடகர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் மல்க இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில், நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிர் பிரிந்தது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று நள்ளிரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாயப் பண்ணைக்கு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டது.

SPB - Updatenews360

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புபடி, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று காலை முதல் அவரது உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.