‘பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கவில்லை’ : எஸ்.பி.பி. குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பாரதிராஜா..!

25 September 2020, 12:55 pm
bharathi raja- updatenews360
Quick Share

சென்னை : பிரபல பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், பல கோடி பேரின் பிரார்த்தனைக்கு பலனில்லாமல் போயி விட்டதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.யின் தங்கை எஸ்.பி சைலஜா, மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

SPB OK - updatenews360

எஸ்பிபிக்கு கோமா நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து திரைப்பிரபலங்கள் மருத்துவமனையில் நலம் விசாரிக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனைக்கு வருகை தந்தார். எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே அவர் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ” எஸ்பிபி மீண்டு வருவார் என உலகின் பல கோடி பேர் பிரார்த்தித்தோம். ஆனால், அது நடக்கவில்லை. நம் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லோருடைய முடிவும் அதன் கையில் தான் இருக்கிறது. துக்கம், வருத்தத்தால் எனக்கு தற்போது பேச்சு வரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 10

0

0