மரடோனா கோப் பிரையண்ட் 2020 இல் மரணமடைந்த விளையாட்டு பிரபலங்கள்!

19 December 2020, 9:31 pm
Quick Share

கடந்த 2020இல் விளையாட்டு உலகை மொத்தமாகச் சோகத்தில் ஆழ்த்தி மரணமடைந்த நட்சத்திரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

கால்பந்து உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த கடவுளின் கை எனச் செல்லமாக அழைக்கப்பட்ட அர்ஜெண்டினா கால்பந்து வீரர் திகோ மரடோனாவின் மரணம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகைச் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் 1989 இல் நடந்த யூஇஎஃப்ஏ கோப்பை தொடரில் நாபோலிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுக்கொடுத்தார். தவிர, சீரி ஏ தொடரில் இரு முறை கோப்பை வெல்லக் காரணமாகவும் இருந்தார்.

மூன்று நாட்கள் அனுசரிப்பு

கடந்த 1986 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கோல் ஆஃப் தி செஞ்சுரி மற்றும் ஹேண்ட் ஆஃப் காட் கோலும் எப்போதும் மறக்க முடியாத ஒன்று. இவரின் மறைவுக்கு அர்ஜெண்டினாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

கோப் பிரையண்ட்

இந்தாண்டு துவக்கத்தில் கடந்த ஜனவரியில் கூடைப்பந்து வீரரான கோப் பிரையண்ட் தனது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 7 பேர் மரணத்தினர். இவர் ஐந்து முறை என்பிஏவில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார். தவிர 2008 மற்றும் 2012 இல் ஒலிம்பிக் தங்கம் வென்ற அமெரிக்க அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

பாவ்லோ ராசி

இத்தாலி அணியின் கால்பந்து வீரரான பாவ்லோராசி கடந்த 1982 இல் அந்த அணி உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். அந்த ஆண்டில் ராசி மொத்தமாக ஒரு ஹாட்ரிக் கோல் உட்பட மொத்தமாக 6 கோல்கள் அடிக்க காரணமாக இருந்துள்ளார். இதுபோன்ற சிறந்த நட்சத்திரங்கள் இந்த 2020 இல் உயிரிழந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தினர்.

Views: - 1

0

0