இலங்கை கடற்படையினரால் 9 தமிழக மீனவர்கள் கைது ; மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 1:59 pm
Quick Share

சென்னை : இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விரைவில்‌ விடுவிக்க
நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌‌ கடிதம்‌ எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-தமிழக முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌, மத்திய வெளியுறவுத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌. ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்‌, தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள்‌ கடந்த 6ம் தேதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச்‌ சென்ற நிலையில்‌, 10ம் தேதி இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத்‌ தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்‌ என்றும்‌, கைது செய்யப்பட்ட மினவர்களையும்‌, அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ இலங்கை அரசு விரைவில்‌ விடுவிக்கத்‌ தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

Views: - 413

0

0