10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு…! இணையதளங்கள் வாயிலாக அறிய சிறப்பு ஏற்பாடுகள்
10 August 2020, 10:12 amசென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
ஏற்கனவே அரசு தரப்பில் அறிவித்திருந்த படி, இன்று காலை 9.30 மணியளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள், பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடம் பதிவு செய்து, முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.
அதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் இணையதளத்திலும் பார்க்கலாம்.
பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம், தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் https://tnresults.nic.in, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் ஆக.17 முதல் 25ம் தேதி வரை தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.