உதயநிதியின் ஓவர் ‘ஆக்ஷன்’…! ஸ்டாலின் ‘நோ’ ரியாக்ஷன்…! கடுப்பில் திமுக முக்கிய ‘தலை’கள்..!

5 August 2020, 12:09 pm
Quick Share

சென்னை: கட்சியில் உதயநிதியின் தலையீடு ஓவராக இருப்பதால் திமுகவின் பெருந்தலைகள் ஏக கடுப்பில் இருக்கின்றனராம்.

திமுக ஒரு கட்டுக்கோப்பான கட்சி. அட போங்கப்பா.. இதெல்லாம் கருணாநிதி காலத்துக்கு டயலாக் என்று பேச்சு இப்போது உ.பிக்களிடம் இருந்து வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது. அதற்கு முழு முதல் காரணமாக இப்போது அனைவரும் கை காட்டுவது உதயநிதி ஸ்டாலினைத் தான்.

கட்சிக்குள் பக்கா பிளானுடன் அடியெடுத்து வைத்துள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். கட்சியின் பல பொறுப்புகளில் தமது ஆதரவாளர்களையும், ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் ஆக்டோபஸ் போல அமர வைப்பது தான்.

அதன் தற்போதைய சாம்பிள் தான் சிற்றரசு நியமனமும்… அதன் பின் திமுகவில் அரங்கேறி வரும் காட்சிகளும். மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் டெல்லிக்கு பிளைட் பிடித்து, பாஜக கொடி பிடிக்க முயல… அரண்டு போயிருக்கிறது திமுக தலைமை.

கூட்டுங்கடா எம் மக்களை என்று கபாலி பட வசனம் போல… நேற்று உடனடியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். தமது நிழலாக வலம் வந்த கு. க. செல்வம் பாஜக பக்கம் தாவுவதற்கான முயற்சிகளை தாமதமாக தான் ஸ்டாலின் பக்கம் கொண்டு சென்றிருக்கின்றனர் கட்சியின் சீனியர்கள்.

சீனியர்களின் சமாதான படலத்தை ஒதுக்கிவிட்டு, செல்போனையும் ஆப் பண்ணிவிட்டு தான் டெல்லிக்கு பயணமாகி இருக்கிறார் செல்வம். அப்புறம் தான் தளபதியிடம் தகவல் சொல்லியுள்ளனர் சீனியர்கள். கொதித்த போன ஸ்டாலின், அவர்களிடம் கோபப்பட்டு உள்ளாராம்.

stalin - duraimurugan - updatenews360

கட்சி பதவிகளை தலைமை தருவது, கிடைக்காவிட்டால் இப்படி செய்வதா என்று பொங்கி இருக்கிறாராம் ஸ்டாலின். அதிமுகவில் பிளவு வந்த போதும் கூட யாரும் மாற்று கட்சிக்கு செல்லவில்லை. சிட்டிங் எம்எல்ஏவான அவர் பாஜகவுக்கு போவதா? என்று கடுப்படித்துள்ளாராம் ஸ்டாலின்.

அப்போது மெல்ல, உதயநிதியின் தலையீடும், அதனால் கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி பற்றியும் சீனியர்கள் மேலோட்டமாக கூறி உள்ளனர். ஆனால் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தான் இருந்திருக்கிறாராம் ஸ்டாலின். எதுவும் செய்யாமல் இருப்பது பாதகமாகும் என்று நினைப்பில் அரைமனதுடன் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் பட்டியலை சேகரிக்க சொல்லி உள்ளாராம்.

Udayanidhi Stalin in 4 sections - updatenews360

தம்மை பற்றி ஸ்டாலினிடம் பற்ற வைத்து சீனியர்கள் பற்றி தகவல் அறிந்த உதயநிதி தரப்பு, செல்வம் போய்விட்டால் திமுகவில் அந்த இடத்தில் வேறு ஆள் இல்லையா? என்ற தொனியில் பேசி உள்ளாராம். அரசியலில் உயர் பதவி அடைய பொறுமையும், விவேகமும் அவசியம்… ஆனால் தலைமைக்கு இப்போதே ஆசைப்படுவதா? என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் திமுக சீனியர்கள்..! வேறென்ன செய்ய முடியும் அவர்களால் என்று நிதர்சனத்தை கூறுகின்றனர் உ.பி.க்கள்….!

Views: - 11

0

0