ஜனவரியில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்?….

20 November 2020, 11:57 am
stalin campaign - updatenews360
Quick Share

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் களப்பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க.விலும் தேர்தலையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இதனை தொடர்ந்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் பிரசாரம் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மாவட்டங்கள் அல்லது திருவாரூரில் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து இன்று உதயநிதியும், வரும் 29ம் தேதி கனிமொழியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.

Views: - 24

0

0