காங்., மதிமுகவுக்கு ஸ்டாலின் கெடு : தன்மானமா…? தொகுதியா..? குழப்பத்தில் கேஎஸ் அழகிரி..!!

6 March 2021, 11:49 am
stalin-ks-alagiri-updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மனித நேய மக்கள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), விடுதலை சிறுத்தைகள் (6), இந்திய கம்யூனிஸ்ட் (6) கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஒருவழியாக நடத்தி முடித்து விட்டது.

இன்னும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், வரும் 8ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை கூட்டணி கட்சிகள் முடித்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், தொகுதி பங்கீட்டிற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதை தடுக்கவும், பிரச்சாரம் உள்ளிட்ட பிற தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

Views: - 2

0

0