முதலமைச்சர் பழனிசாமியுடன் எல். முருகன் சந்திப்பு : முதலமைச்சர் வேட்பாளராக தேர்வானதற்கு வாழ்த்து..!

Author: Babu
9 October 2020, 6:23 pm
bjp - admk 111- updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று சந்தித்து பேசினார்.

அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வரும் வேளையில், எதிர்வரும் தேர்தலிலும் இந்தக் கூட்டணியே தொடரும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் மாற்றம் நிகழும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்த நிலையில், அதிமுகவுடனான பாஜக கூட்டணி நீடிக்கும் என மாநில தலைவர் எல். முருகன் இன்று மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று மாலை சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Views: - 48

0

0