மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு..! தமிழகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..!

31 August 2020, 12:17 pm
Doctors_UpdateNews360
Quick Share

கிராமப் பகுதிகள் மற்றும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்புகளில் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், இடஒதுக்கீட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய மாநிலங்களுக்கு போதுமான சட்ட அதிகாரம் உள்ளது என்று கூறியது.

அத்தகைய இடஒதுக்கீட்டைத் தடுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) கட்டுப்பாடு தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு சட்டரீதியான அமைப்பு என்றும், இட ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்குவது அரசு மருத்துவமனைகளிலும் கிராமப்புறங்களிலும் பணிபுரிபவர்களை ஊக்குவிக்கும் என்று வாதிட்டு தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பிறரின் வேண்டுகோளின் பேரில் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம் ஆர் ஷா, அனிருத் போஸ் ஆகியோரும் இருந்தனர்.

Views: - 0

0

0