டெல்லி வன்முறை சம்பவம்… கடுமையான தண்டனை இருக்க வேண்டும் : முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
28 January 2021, 3:41 pmடெல்லி : டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் அணிவகுப்பு, பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை மீறி, காவல்துறையினருடன் சண்டையிட்டு, வாகனங்களை கவிழ்த்து, கடும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் உச்சகட்டமாக செங்கோட்டையின் கோபுரங்களில் ஏறி அவர்களின் கொடியை ஏற்றி அடாவடியில் ஈடுபட்டனர்.
இந்தக் கலவரத்தை ஒடுக்க வந்த போலீசாருக்கும் – விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், பேரணியில் ஈடுபட்டவர்கள் கத்தி மற்றும் தடியால் போலீசாரை தாக்கினர். இதில், விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 300 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
எது நடந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது என்றும், ஆனால், அமைதியான முறையில் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
0
0