கணவரின் விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை.. திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 12:36 pm
Subbu Resign - Updatenews360
Quick Share

1972ல் தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, 1977 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய எம்ஜிஆர், அவர் வெற்றி பெற்றதும் ஜவுளித் துறை அமைச்சராகவும் நியமித்து எதிர்காலத்தை ஒளிமயமாக்கினார். ஆனால் 1980ல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டபோது அவர் எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கினார்.

திமுகவில் சேர்ந்த பிறகு எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் வெற்றி பெற்று தன்னை கட்சியில் வலுப்படுத்தியும் கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் சி.ஆர்.சரவஸ்வதியுடம் தோல்வியடைந்தார். சுப்புலட்சுமி வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் சட்டப்பேரவை சபாநாயகர் என திமுக வட்டாரங்கள் கூறி வந்தன.

ஆனால் அவர் தோல்வியடைந்த நிலையில், எம்பி சீட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அதையும் திமுக கொடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுகவுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை சமூக வைலதளங்களில் பதிவு செய்தார்.

அதுதான் அவருடைய கொந்தளிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறும் திமுகவினர் கட்சித் தலைமைக்கு கண்டனக் கணைகளை குவித்தும் வருகின்றனர். திமுகவினரே திமுகவை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுப்புலட்சுமியோ தனது கணவரின் அதிரடி நடவடிக்கையால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வந்தார்.

இது ஒருபுறமிருக்க விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை சுப்புலட்சுமி ஜெகதீசன் புறக்கணித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சி தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம். ஆனால் தலைமையோ இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது என்கிறார்கள். இது குறித்து திமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

Views: - 380

0

1