தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்த தளர்வில்லாத முழு ஊரடங்கு..! ஆதரவு அளித்த பொதுமக்கள்

2 August 2020, 10:24 am
cbe Lockdown -Updatenews360
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வில்லாத முழு ஊரடங்கிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலானது, நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது.

அதனை தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதாவது எந்த தளர்வுகளும் அன்றைய தினத்தின் போது அளிக்கப்படுவது இல்லை.

அதன்படி இந்த மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிறு என்பதால் இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.

இதனை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகள், மருத்துவமனை, தவிர மற்ற அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ளன. அனைத்து தரப்பினரும் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தவிர்த்து வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. ஆகையால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவது பாராட்டுகளை பெற்றுள்ளது.