பாதுகாப்புத் துறையை வலுவாக்கும் இந்தியா..! நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணை சோதனை வெற்றி!!

By: Babu
5 October 2020, 5:11 pm
DRDO tests SMART - updatenews360
Quick Share

ஒடிசா : நீர்முழ்கி கப்பலை குறிவைத்து தாக்கும் இலகுரக ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச்சனை மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், எந்த நேரமும் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியிருக்க, இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. போர் விமானங்கள் கொள்முதல், அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகிறது.

இந்த நிலையில், ஓடிசா கடலை ஒட்டிய வீலர் தீவில் டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை ஸ்மார்ட் சோதனை இன்று வெற்றிகரமாக செய்யப்பட்டது. இலக்கான நீர்முழ்கி கப்பலை குறித்து வைத்து தாக்கி அழித்தது. அதோடு, இந்த சோதனையில், வேகக்குறைப்பு மெக்கானிசத்தை நிலைநிறுத்துதல், மூக்கு கூம்பு பிரிதல் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் சரியான முறையில் நடைபெற்றது.

இந்த சாதனைகளுக்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத் தெரிவித்தார்.

Views: - 58

0

0