லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
Author: Udayachandran RadhaKrishnan5 அக்டோபர் 2024, 1:59 மணி
திருப்பதி ஏழுமலையான் கோவில் கலப்பட நெய் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மேம்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்ய டெண்டர் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த வைஷ்ணவி டைரி நிறுவனத்திடம் இருந்து நெய்யை வாங்கி அந்த நெய்யை தன்னுடைய தயாரிப்பு என்பது போல் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது விசாரணையின் ஒரு பகுதியாக விற்பனை வரித்துறை வழங்கிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு அமைக்கப்பட இருக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
0
0