அமலாக்கத்துறை கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணை ஜுலை 10க்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்,” என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.
ஆனால், அமலாக்கத்துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை களைக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பழுதாகி நின்ற லாரி… படார் என கேட்ட சத்தம் ; சுக்குநூறாக நொறுங்கிய ஆம்னிப் பேருந்து… 4 பயணிகள் பரிதாப பலி!!!
இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஏற்கனவே 2-3 வருடங்கள் பிணை இல்லாமல் கைதிகளாக இருப்பவர்கள் உள்ளனர். வழக்கு விசாரணைக்கு வராமல் சிறையில் இருக்கும் பலர் உள்ளனர். எனவே இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது. நாளை வழக்கு விசாரிக்கப்படும், என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளதாகவும், ஆனால் தற்போது அவர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
குறைந்தபட்சம் நாளைய தினம் விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி ஜூலை 10ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.