திமுகவின் மூத்த நிர்வாகியாக இருப்பவர் திருச்சி சிவா, இவரது மகன் திருச்சி சூர்யா இவர் திமுக மற்றும் தனது தந்தை மீது கொண்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு தன்னை இணைத்துக்கொண்டார்.
இதனையடுத்து அண்ணாமலையின் ஆதரவாளர்களில் ஒருவராக திருச்சி சூர்யா செயல்பட்டார். அவருக்கு மாநில அளவில் பொறுப்பும் அளிக்கப்பட்டது.
மேலும் சமூக வலைதளத்தில் பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுகவிற்கு எதிராகவும் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அப்போது பாஜகவில் பதவி வழங்குவதில் சூர்யா சிவாவிற்கும், பெண் நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக பெண் நிர்வாகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளால் அர்ஜனை செய்து கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி சூர்யாவை 6 மாதகாலம் கட்சி பணிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த திருச்சி சூர்யா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருந்த போதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழ்ந்தும், அண்ணாமலைக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக அமைதி காத்து வந்த திருச்சி சூர்யா தற்போது அண்ணாமலை எதிராக டுவிட்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன் வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும் நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.