மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : எந்த பணிகளையும் துவங்கக்கூடாது என காவிரி நதி நீர் மேலாண்மை கூட்டத்தில் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 2:35 pm
Cauvery Meeting - Updatenews360
Quick Share

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது என காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12 வது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த மாதத்திற்கான நீர் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காவிரியில் இருந்து தேவைப்படாத உபரி நீரை மட்டும் திறந்து விட்டுவிட்டு, தேவைப்படும் போது, கணக்காக கர்நாடக அரசு காட்டுகிறார்கள் என்று தமிழகம் சார்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மேலும், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறிய கருத்துக்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், மேகதாது மட்டுமன்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டுவது என்றாலும் எங்கள் அனுமதி தேவை என தெரிவித்துள்ளனர்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது என காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Views: - 190

0

0