+2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது…தமிழகத்தில் 8.37 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள்…முழுவிவரம் இதோ..!!

Author: Rajesh
5 May 2022, 8:37 am
Quick Share

சென்னை: +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கும் நிலையில் மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் எழுதுகின்றனர்.

Tamil Nadu +2/ 12th Result to announce before TN Elections 2016?

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டாலும், மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும் என்றும், அந்த நேரத்தில் தேர்வர்கள் தேர்வறைக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை கூறி இருக்கிறது.

தேர்வு அறையில் மாணவர்கள் தடையின்றி தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து செய்து இருக்கிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தேர்வை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், பிளஸ்-2 தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி.,

மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி இருக்க வேண்டியது கட்டாயம்.

கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை சுத்தம் செய்தல் அவசியம்.

மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 809

0

0