புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு..! ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு..!

20 April 2021, 10:24 pm
Tamilisai_Pudhuchery_Governor_Updatenews360
Quick Share

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பதாக, துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் உச்சம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களும், முழு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என மாநிலத்தில் உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது புதுச்சேரியும் இணைந்துள்ளது. அங்கு சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. 

முழு ஊரடங்கு இல்லாத வார நாட்களிலும் பகல் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கும். அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் 2 மணிக்கு பின் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம், கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள வழிபாட்டு தலங்களில் தேரோட்டம் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. வழிபாட்டு தலங்களில் கொரோனா விதிமுறைகளுடன் வழிபாடு செய்ய மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 79

0

0