ரெண்டே வாரம்… தமிழகத்தை கதறவிடும் ரெண்டே மாவட்டம்… எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசு!!

13 May 2021, 6:19 pm
Corona_Patient_Death_UpdateNews360
Quick Share

சென்னை : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு பற்றி மத்திய சுகாதாரத்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளே நம்மை பாவமாக பார்க்கும் அளவிற்கு இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றின் 2வது அலைக்கு கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

இந்த நிலையில், எந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது என்பது குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் கொரோனா நேர்மறை சதவிகிதம் 22.9 சதவீதமாக உள்ளதாகவும், கடந்த இரு வாரங்களில் மட்டும் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலத்தின்தான் அதிகமானோர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு 5.92 லட்சம் பேர் இதுவரையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Views: - 308

0

0