தமிழகத்தில் அந்த 7 மாவட்டங்களில் கொரோனா தாறுமாறு : அலர்ட் கொடுக்கும் மத்திய அரசு!!

Author: Babu Lakshmanan
10 August 2021, 7:39 pm
Quick Share

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. ஆனால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதில், கேரளாவைச் சேர்ந்த 11 மாவட்டங்களும், கர்நாடகாவைச் சேர்ந்த 5 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 1,77,091 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 470

0

0