மீண்டும் நீலகிரியில் கனமழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

10 September 2020, 2:05 pm
Rainfall_UpdateNews360
Quick Share

சென்னை ; தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் நீலகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மித கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

அதிகபட்சமாக, நீலகிரியின் தேவலா 21 செ.மீ., நாமக்கல் 13 செ.மீ., மழை பதிவுவாகி உள்ளது.

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதி, தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0