தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஏப்., 6ம் தேதி தேர்தல் : மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் ..!!!

26 February 2021, 6:04 pm
Sunil arora - updatenews360
Quick Share

டெல்லி : தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்.,6ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், பண்டிகைகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது.

இதனை டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அவர் கூறியதாவது :-தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக காலம் வரும் மே மற்றும் ஜுன் மாதங்களுடன் நிறைவடைகிறது. இந்த 5 மாநிலங்களில் மட்டும் 18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 234 தொகுதிகளில் வாக்களிக்க ஏதுவாக, 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழக தேர்தல் செலவின பார்வையாளராக மதுமாஜன் மற்றும பாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழக சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 5 வாகனங்களுக்கு அதிகமாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பாக செய்தித்தாள்கள், ஊடகங்களில் கட்சிகள் விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்துவது கட்டாயமாகும்.

தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே ஒரு வேட்பாளர் செலவு செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர் உள்பட 2 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. சி விஜில் ஆப் மூலம் மக்கள் ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து உடனுக்குடன் புகார் அளிக்கலாம். பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருத்தில் கொள்ளப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். வாக்குச்சாவடிகள் அனைத்தும் தரைதளத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் இந்த 5 மாநிலங்களில் தற்போது முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விபரம் :

தேர்தல் தேதி – ஏப்., 6

வேட்பு மனு தாக்கல் – மார்ச் 12

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 19

பரிசீலனை – மார்ச் 20

வேட்பு மனு வாபஸ் – மார்ச் 22

வாக்கு எண்ணிக்கை – மே 2

புதுச்சேரி தேர்தல் விபரம் :

தேர்தல் தேதி – ஏப்., 6

வேட்பு மனு தாக்கல் – மார்ச் 12

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 19

பரிசீலனை – மார்ச் 20

வேட்பு மனு வாபஸ் – மார்ச் 22

வாக்கு எண்ணிக்கை – மே 2

கேரள தேர்தல் விபரம் :

தேர்தல் தேதி – ஏப்., 6

வேட்பு மனு தாக்கல் – மார்ச் 12

வேட்பு மனு வாபஸ் – மார்ச் 22

வாக்கு எண்ணிக்கை – மே 2

மேற்கு வங்கம் தேர்தல் விபரம் (8 கட்டங்கள்)

தேர்தல் தேதி : மார்ச் 27, ஏப்.,1, ஏப்.,6, ஏப்.,10, ஏப்.,17, ஏப்.,22, ஏப்., 26, ஏப., 29

அசாம் தேர்தல் விபரம் ( 3 கட்டங்கள் )

தேர்தல் தேதி : மார்ச் 27, ஏப்., 1, ஏப்., 6

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 7

0

0