தமிழகத்தின் மகுடத்தை சூடப்போவது யார்…? Updatenews360 நடத்திய மெகா கருத்துக்கணிப்பு…!!!

Author: Babu Lakshmanan
26 March 2021, 8:21 pm
Tamilnadu - govt - updatenews360
Quick Share

இனி நான் தான் தமிழகத்தின் அடையாளம் என்பதை உணர்த்தவும், நிரூபிக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இரு முக்கிய அரசியல் தலைவர்கள் 2021 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கின்றனர். அரசியலில் பல ஆண்டுகள் அனுபவமிருந்தும், கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சந்திக்கும் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலினுக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

அரசியலுக்கு வரப்போவதில்லை எனக் கூறிக் கொண்டிருந்த கமல்ஹாசனும், தடபுடலாக களமிறங்கி, திராவிடக் கட்சிகளுக்கே சவால் விடும் வகையில் பணியாற்றி வருகிறார். அதேபோல, சிறையில் இருந்து வந்த சசிகலாவும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழிவிட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மேலும், பரபரப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார். இப்படி தேர்தல் நடக்கவிருக்கும் சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன.

தமிழக சட்டப்பேரவை பெரும்பாலும் சந்தித்திடாத நிகழ்வு இந்த தேர்தலில் அரங்கேறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் மற்றும் டிடிவி தினகரன் என 5 முதலமைச்சர் வேட்பாளர்கள் இந்த முறை களத்தில் உள்ளனர்.

EPS - stalin - updatenews360

இந்த சூழலில் பொதுமக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களையும் 4 மண்டலங்களாக பிரித்து 234 தொகுதிகளிலும் Updatenews360 மற்றும் பப்ளிக் வாய்ஸ் நிறுவனம் இணைந்து நேரடி கள ஆய்வு நடத்தியது. (எந்தக் கருத்துக்களும் தொலைபேசியின் மூலம் கேட்டு வாங்கியதல்ல).

அதில், தங்களது ஓட்டு யாருக்கு..? அதற்கான காரணம் என்ன..?, தங்களின் தொகுதி பிரச்சனைகள் என்ன..? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

வடக்கு மண்டலத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த 11 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை தற்போது காணலம்.

அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் 37 தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் அதிமுக 15 தொகுதிகளையும், திமுக 21தொகுதிகளையும் கைப்பற்றுகிறது. 01 தொகுதியில் இழுபறி நீடிக்கிறது.

கொங்கு மண்டலத்தை பொறுத்தவரையில், தருமபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 68 தொகுதிகள் உள்ளன. அதில், அதிமுக 45 தொகுதிகளையும், திமுக 21 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது. 02 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது.

கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 51 தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில், அதிமுக 29 தொகுதிகளையும், திமுக 15 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது. 7 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 127 தொகுதிகளையும், திமுக 96 தொகுதிகளையும் கைப்பற்ற உள்ளது.

மொத்தமாக 127 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மக்களின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நிதியுதவி, கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளும், வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு போன்ற ஆளும், அதிமுக அரசின் அதிரடி அறிவுப்புகளுக்கு மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

Views: - 287

2

0