தி.மு.க. ஆட்சியில் ரூ.100 கோடி ‘மெகா வங்கி ஊழல்’ : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

18 September 2020, 5:51 pm
Quick Share

சென்னை : தி.மு.க. ஆட்சியில் ரூ.100 கோடி வரை வங்கி ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2006-2007ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் ரூ.100 கோடி வரையிலும் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போரூர், திருவொற்றியூர், பல்லாவரம், அம்பத்தூர் உள்ளிட்ட வங்கி கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்களின் சேமிப்பு, நகைக்கடன், நிரந்தர வைப்பு, மகளிர் மேம்பாட்டு நிதி உள்ளிட்டவற்றில் திமுகவினர் இந்த சுரண்டலை அரங்கேற்றியுள்ளனர்.

தி.மு.க.வினரின் இந்த கொள்ளையால் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய வட்டிப் பணம், பங்கு லாபத் தொகை உள்ளிட்டவற்றை வழங்க முடியாத நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த மெகா வங்கி ஊழல் குறித்து 6 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் நடத்தி விசாரணையில், 2010ம் ஆண்டில் 333 பக்கங்கள் கொண்ட உண்மை கண்டறியும் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.100 கோடி வரையிலான இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Views: - 11

0

0