தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்கும் : அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!

10 September 2020, 1:29 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதிபடுத்தும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேட்டியளித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும், மும்மொழிக் கொள்கை முடிவை வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், இருமொழி கொள்கைதான் தமிழகத்தில் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும். புதிய கல்வி கொள்கை குறித்து அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து வருகிறது. கூடுதல் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் அரசு பள்ளியில் உள்ளனர், எனக் கூறினார்.

Views: - 0

0

0