கோவையில் கயிறு வணிக மேம்பாடு நிறுவனம்… 19 மாவட்டங்களில் தரம் உயர்த்தப்படும் அரசு மருத்துவமனைகள் : தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!!

Author: Babu Lakshmanan
18 March 2022, 12:23 pm
Quick Share

சென்னை : சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய திட்டங்கள் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது :-

இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கொரோனா பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்திய நிலை மாற்றப்பட்டுள்ளது. சிறந்த நிதி நிர்வாகத்தை திமுக அரசு கடைபிடித்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7,000 கோடி குறைகிறது.

உக்ரைன் – ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் வழக்கம் போல எந்த தடைகளும் இன்றி செயல்படுத்தப்படும். தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை. தமிழ்வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்.

நவீன நுட்பத்தில் நிலங்களை அளவீடு செய்யும் வகையில் ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு

தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும்

விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

சென்னையில் மழை, வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது

பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு

நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரூ.3,384 கோடி ஒதுக்கீடு

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்

கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை

பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வனப்பகுதிகளில் வரையாடுகளை பாதுகாக்கும் சிறப்பு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

வள்ளலார் பல்லுயிர் காப்பகம் அமைப்புக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பில் மாவட்ட மைய நூலகங்கள்

டாக்டர் முத்துலுட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பி தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்

அரசு பள்ளி மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்

காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு

விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்கு (ST) ரூ.50 கோடி செலவில் 1,000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,452 கோடி ஒதுக்கீடு

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்

முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் சீர்செய்யப்படும்

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி ஒதுக்கீடு

19 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த ரூ.1,019 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற பகுதிகளை பசுமையாக்கும் வகையில் 500 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு

சென்னையை மேம்படுத்தும் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி

நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு

பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு

வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் வரி வருவாய் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்

தமிழகத்தின் வரவு – செலவு திட்ட மதிப்பீடு ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்

காவிரி நீர் வடிநிலப்பகுதிகளை சீரமைக்க ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு

ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ.2,787 கோடி ஒதுக்கீடு. டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு

கொரோனா பாதித்த உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ரூ.79 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.19,000 கோடி ஒதுக்கீடு

தமிழக வீட்டு வசதித்துறைக்கு ரூ.8,700 கோடி ஒதுக்கீடு

சென்னையில் ரூ.54.61 கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்

கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும்

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடி செலவில் அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்படும்

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 838

0

0