சுகாதாரத்துறைக்கு ரூ.18,933 கோடி… மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி : பட்ஜெட்டின் மருத்துவ துறைக்கான முக்கிய அறிவிப்புகள்..!!
Author: Babu Lakshmanan13 August 2021, 12:10 pm
தமிழக அரசின் பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 – 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் தியாகராஜன் முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அதில் சுகாதாரத்துறைக்கென பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :-
தமிழகத்தில் தினசரி 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திறன் உள்ளது. ஆனால், 2.40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொடர்பான செலவுகளுக்கு ரூ.241.40 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரூ.257 கோடியில் துவங்கப்பட்டுள்ளது
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி ஒதுககீடு
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஆம்புலன்ஸ்களில் எண்ணிக்கை 1,303 ஆக உயர்த்தப்படும்
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,046.69 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.116 கோடி ஒதுக்கீடு
கலைஞர் முன்மொழிந்த சித்தா பல்கலைக்கழகத்தை உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு
0
0