உதயநிதியை அமைச்சராக்கிய கையோடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ; CM ஸ்டாலின் செயலால் சமாதானமானாரா ஐ.பெரியசாமி?

Author: Babu Lakshmanan
14 December 2022, 11:17 am
Quick Share

சென்னை : ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பும் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவியேற்ற அவருக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனிடையே, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பை தொடர்ந்து, ஒன்பது அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியது. அதன்படி, 10 அமைச்சர்களுக்கு புதிய இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூத்த அமைச்சர்களான ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் மற்றும் ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

கடந்த முறை கூட்டுறவுத்துறை ஒதுக்கியதால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படும் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய துறை ஒதுக்கீடு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

Stalin Warn - Updatenews360

புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கீடு

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராக மாற்றம்

வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு, நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதித்துறை இலாகாக்கள் ஒதுக்கீடு

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம்

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு

சிவ.வி.மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை ஒதுக்கீடு

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி, திட்டம், மனிதவள மேம்பாடு, ஓய்வூதியத்துறை ஒதுக்கீடு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கூடுதலாக சிஎம்டிஏ ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக காதி கிராம தொழில் இலாகா ஒதுக்கீடு

கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு நிலம் அற்றவர்களுக்கு நிலம் வழங்கும் இலாகா ஒதுக்கீடு, செய்யப்பட்டுள்ளது.

Views: - 408

0

0