தமிழக தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவி மேலும் 3 மாத காலம் நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

Author: Babu
14 October 2020, 3:58 pm
k shanmugam - updatenews360
Quick Share

சென்னை : தமிழக தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவிகாலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2019-ம் ஆண்டோடு ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்முகம் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவரும் கடந்த ஜுலை 31-ம் தேதியோடு ஓய்வு பெற இருந்தார்.

ஆனால், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், தலைமை செயலர் சண்முகத்தின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தலைமை செயலர் சண்முகத்தின் பதவி காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டிக்க, கடந்த ஆக.,13ம் தேதி மத்திய பணியாளர் நிர்வாகத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தலைமைச் செயலர் சண்முகத்தின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 2வது முறையாக தலைமை செயலரின் பதவியை மத்திய அரசு நீட்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 52

0

0