கோவை, திருப்பூர், ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா : இன்று ஒரே நாளில் 1,682 பேருக்கு தொற்று பாதிப்பு

Author: Babu Lakshmanan
22 September 2021, 7:48 pm
Delta Plus Corona - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று 1,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,50,370ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 194 பேருக்கும், செங்கல்பட்டுவில் 110 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும், திருப்பூரில் 101 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,400 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,627 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 97 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 141

0

0