நாளுக்கு நாள் விலகும் கொரோனா பிடி..! மக்களிடம் அதிகரிக்கும் நம்பிக்கை : இன்று பாதிப்பு 5,063… டிஸ்சார்ஜ் 6,501..!

4 August 2020, 6:45 pm
Corona_Virus_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பொதுமக்களிடத்தில் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்து, 5,063 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்றும் 108 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 6,501 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 08 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 9

0

0