இன்று 5,000க்கு கீழ் குறைந்தது தமிழக கொரோனா : ஒரே நாளில் 5,165 பேர் டிஸ்சார்ஜ்..!!

By: Babu
12 October 2020, 6:46 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் நாளொன்றுக்கான சரசாரி 5 ஆயிரத்தை விட குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 6 ஆயிரத்திற்கு மிகாமல், பாதிப்பு எண்ணிக்கை ஒரே நிலையை எட்டியிருந்தது.

இந்த நிலையில், 40 நாட்களுக்கு பிறகு தமிழக கொரோனா எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இது தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருவதை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மக்களுக்கு அரசின் தடுப்பு நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,61,264 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,314 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5,165 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 07 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 40

0

0