3.50 லட்சத்தை நெருங்கிய டிஸ்சார்ஜ் : இன்று ஒரே நாளில் 5,752 பேர் வீடு திரும்பினர்..!

28 August 2020, 8:16 pm
Corona_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3.50 லட்சத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக ஒரே நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், இன்று 5,998 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. அதாவது, 4,09,238 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 7,050 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,752 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 0

0

0