இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 7,071 பேர் டிஸ்சார்ஜ் : 5,879 பேருக்கு பாதிப்பு…!

1 August 2020, 6:22 pm
corona virus new 13- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்து, 5,879 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 7,010 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply