4 லட்சத்தை நெருங்கிய தமிழக கொரோனா பாதிப்பு : இன்று ஒரே நாளில் 5,958 பேருக்கு தொற்று உறுதி..!

26 August 2020, 6:38 pm
pondy Corona Camp
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக ஒரே நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், இன்று 5,958 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,290 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 6,839ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,606 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 060ஆக அதிகரித்துள்ளது.

Views: - 29

0

0