இன்றும் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா…! 5994 பேருக்கு தொற்று.. 119 பேர் பலி…!
9 August 2020, 6:24 pmசென்னை: தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருக்கிறது. தென் இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்.
பாதிப்பு, பலி எண்ணிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தில் உள்ளது. இந் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் சுகாதாரத் துறை இன்று 5994 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 5994 பேரில் 989 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.
சென்னையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 109,117 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 119 பேர் பலியாகியுள்ளனர். அதன் காரணமாக, தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4927 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 6020 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த குணமானோர் எண்ணிக்கை 2,38,638 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 70,186 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,09,708 என்று சுகாதாரத்துறை தமது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
0
0