தமிழகத்தில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு..? நாளை மீண்டும் ஆலோசனை…

15 April 2021, 11:06 am
Cbe Sunday LockDown- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 7,800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் பலியாகினர். இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த 10ம் தேதி முதல் ஏற்கனவே அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Views: - 16

0

0