கொரோனாவால் குறைந்த தமிழக வருவாய் மீண்டும் உயர்வு : எடப்பாடியாரின் ஆட்சியில் மீளும் தமிழகம்!!

10 November 2020, 8:00 am
TN economy - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதிகரித்து வரும் தொழில் முதலீடுகளாலும், எழுச்சி பெற்று வரும் வாகன உற்பத்தியாலும், கட்டுமானத்துறையாலும், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, மாநில அரசின் வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனாப் பாதிப்பாலும், அதைத்தொடர்ந்து ஊரடங்கு நடவடிக்கைகளாலும், எதிர்மறை (மைனஸ்) நிலைக்குச் சென்ற மாநில வருவாய் மீண்டும் நேர்மறை நிலைக்குச் சென்றது. தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 60 சதவீதம், அதன் சொந்த வருவாய் இனங்களில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தவிர வரியல்லாத வருவாய், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு, மத்திய உதவித்தொகை ஆகியவற்றையும் சேர்த்து மாநில வருவாயில் கணக்கிடப்படும்.

TN Secretariat - Updatenews360

இதில், 2019-20-ஆம் ஆண்டுக்கான மாநிலத்தின் சொந்த வருவாய் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 462 கோடியாக இருக்கிறது. வரியல்லாத வருவாய் 12 ஆயிரத்து 267 கோடியாகவும், மத்திய வரியில் இருந்து பெறப்பட்ட மாநிலத்தின் பங்கு 26 ஆயிரத்து 392 கோடியாகவும், மத்திய நிதி 27 ஆயிரத்து 783 கோடியாகவும் இருக்கிறது.

2020-21-ஆம் ஆண்டுக்கான நிதி வருவாயில் செப்டம்பர் வரை மொத்த வருவாய் 67 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த மொத்த வருமானத்தில் மாநில அரசின் சொந்த வருவாய் மட்டும் 38 ஆயிரத்து 426 கோடி ரூபாயாகும். இதுவரை கிடைத்த வருவாயைக் கணக்கிடும்போது, மாநிலத்தின் சொந்த வருவாய் இந்த செப்டம்பர் மாதம் 7 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மாநில வருவாய் நேர்மறையாக மாறியிருப்பது பொருளாதார வளர்ச்சியின் முக்கியக் குறியீடு என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில், இரண்டாவது காலாண்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்தது. இரண்டாவது காலாண்டில் ரூ. 23 ஆயிரத்து 332 கோடி அளவு முதலீட்டில் 132 திட்டங்களை ஈர்த்தது. இந்தியாவின் பொருளாதார மையமாக இருக்கும் மகாராஷ்டிரான் 5-வது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியாவின் மொத்த பொருளாதார முதலீட்டில் பத்து சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்கைத் தமிழகம் தன் பக்கம் திருப்பியது.

cars_automobiles_industry_kia_motors_updatenews360

கொரோனாவுக்குப் பிறகு தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருவதைக்காட்டும் இன்னொரு அறிகுறியாக மாநிலத்தில் வாகன விற்பனை ஏற்கனவே அதிகரித்து உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையையோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டும் செப்டம்பர் மாத விற்பனை 17.18 சதவீதம் அதிகரித்தது. தமிழக கிராமப் பொருளாதரம் வளமாக இருப்பதை டிராக்டர் விற்பனை இரு மடங்காக உயர்ந்தது.

பொருளாதார வளர்ச்சியின் இன்னொரு அடையாளமாக கட்டுமானத்துறையும் வளர்ச்சிபெறுவதை அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள் காட்டுகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக ரூ. 1,056 கோடி வருமானம் அரசுக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வருமானம் 1,064 கோடியாக உயர்ந்தது. 2019-ஆம் ஆண்டு எந்தவித பாதிப்பும் இல்லாத ஆண்டாகும். மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த ஆண்டு பத்திரப்பதிவு குறைவதற்குப் பதில் உயர்ந்துள்ளது தமிழகம் தற்போதுள்ள அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் விரைந்து வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பவதையே எடுத்துக்காட்டுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை சரிசெய்யும் விதத்தில் அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இதையே வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாகப் பேசுவோம் என்று கூறிவருகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கிறது என்பதையே தொடர்ந்து வரும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

கர்நாடகத்தில் பொதுப்போக்குவரத்தும், பொருளாதார நடவடிக்கைகளும் முன்பே தொடங்கப்பட்டு தொழில் முதலீடுகளைத் தன்பக்கம் இழுப்பதில் அவசரமும் முனைப்பும் காட்டியது கர்நாடகம். ஆனால், தமிழகம் மெதுவாகத்தான் தளர்வுகளை அறிவித்தது. பொதுப்போக்குவரத்தையும், தொழில் நடவடிக்கைகளையும் அனுமதித்தது. ஆனால் ‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவது’ போல் மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் வாகன உற்பத்தியையும் கட்டுமானத்துறையை வளர்ப்பதிலும் மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதிலும் முன்னணி மாநிலமாக இருக்கிறது.

Views: - 22

0

0

1 thought on “கொரோனாவால் குறைந்த தமிழக வருவாய் மீண்டும் உயர்வு : எடப்பாடியாரின் ஆட்சியில் மீளும் தமிழகம்!!

Comments are closed.