கொரோனாவை ஒழிக்க… அரசுடன் கைக்கோருங்கள்.. : பொதுமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தல்..!!
8 April 2021, 5:58 pmசென்னை : கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை மீண்டும் நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,459 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால் அரசியல் தலைவர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு முறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதற்காக, புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில், முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பொது இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை குழுவ வேண்டும், என்றும் கூறினார்.
0
0