தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்திற்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு

1 December 2020, 7:15 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : நடப்பு நிதியாண்டுக்கான அரசின் தன்னிறைவு திட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சமுதாய சொத்துக்களை மக்களின் பங்களிப்புடன் பராமரிப்பதற்காக தன்னிறைவுத் திட்டம் என்னும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2011-12ம் நிதியாண்டுகளில் கொண்டு வந்தது. ஆண்டுதோறும் ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அந்த வகையில், 2020-21ம் நிதியாண்டுக்கு ரூ.50 கோடியை ஒதுக்க ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பரிந்துரை செய்திருந்தார். இதனை பரிசீலித்த தமிழக அரசு, ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தன்னிறைவு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை 3 நிலைகளாக புகைப்படம் எடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 18

0

0