பொது நூலகங்களை செப்.,1ம் தேதி முதல் திறக்கலாம்
28 August 2020, 12:44 pmசென்னை : பொதுநூலகங்களை வரும் செப்.,1ம் தேதி முதல் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் இந்த ஊரடங்கில் அறிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, மால்கள், திரையரங்குகள், நூலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, நூலகங்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை, பொது நூலகங்களின் இயக்குநர் தமிழக அரசிடம் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசும், வரும் செப்.,1ம் தேதி முதல் பொது நூலகங்களை திறக்க உத்தரவிட்டது.
அதன்படி, கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நூலகங்கள் திறக்கப்பட உள்ளன.
காரைல 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைல நூலகங்களை செயல்பட வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் நூலகங்களுக்கு வர தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.