கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 % போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு

12 November 2020, 8:06 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 % போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, பொதுத்துறை ஊழியர்கள் என துறை வாரியான போனஸை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. மேலும் குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம், கருணைத் தொகை 1.67 சதவீதம் சேர்த்து 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 27

0

0