2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் : மகளிருக்கான ரூ.1,000 உதவித் தொகை பற்றிய அறிவிப்பு இடம்பெறுமா..?

Author: Babu Lakshmanan
18 March 2022, 9:17 am
Quick Share

சென்னை : 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக அரசு இன்று தாக்கல் செய்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்று, தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகம் இருப்பதால், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியாது என்றும் அறிவித்து, பணபலன் சார்ந்த வாக்குறுதிகளை கிடப்பில் போட்டுள்ளது. மேலும், புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தாமல் இருந்த திட்டங்களிலேயே தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் முழு பட்ஜெட்டைஇன்று தாக்கல் செய்கிறார். இதில், மகளிர் உரிமை தொகையான ரூ.1,000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி இருப்பதுபோல, தனியாக மாதம் 2 முறை வெளியாகும் கல்வி பத்திரிகையும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். தி.மு.க. ஆட்சியில்தான் வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 802

0

0